ஹோம் /நியூஸ் /கல்வி /

செயலி மூலம் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவு - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

செயலி மூலம் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவு - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பள்ளிக் கல்வித் துறை

பள்ளிக் கல்வித் துறை

அடுத்த மாதம் முதல் செயலி மூலமாக மட்டுமே மாணவர்கள் ஆசிரியர்களுக்கான வருகை பதிவேட்டினை பதிவு செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வரும் ஜனவரி மாதத்தில் பள்ளி தொடக்க நாளில் இருந்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்குமான வருகைப் பதிவேடு TNSED attendance என்ற செயலி மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னால் TNSED Schools என்ற செயலியைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபயோகிப்படுத்திக்கொண்டு இருந்தனர். தற்போது அதனை எளிமைப்படுத்தும் விதமாக இந்த புது செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 மாதங்களாக உபயோகப்படுத்திப் பார்க்கப்பட்டு தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உபயோகப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

பழைய செயலியான TNSED Schools செயலியிலிருந்து வெளியேறி TNSED attendance செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் உபயோகப்படுத்திய அதே பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைவு செய்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை நாட்கள் அறிவிப்பு : எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?

பள்ளி வேளை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களுக்கு ஏற்றவாறு மாறியமைக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள் (முற்பகல், பிற்பகல்) வருகைப் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி ஆசிரியர்கள், வேலை ஆட்கள் மற்றும் மாணவர்களில் வருகைப் பதிவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து வைத்துக்கொள்ள முடியும்.

First published:

Tags: Apps, Tn schools