GATE தேர்வில் வெற்றிபெற்ற 67 வயது தமிழக பேராசிரியர் - யார் இவர்?

GATE தேர்வில் வெற்றிபெற்ற 67 வயது தமிழக பேராசிரியர்

எம்.டெக் படிப்புகளை உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கும் GATE நுழைவுத் தேர்வு அவசியமாகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஓய்வு பெற்ற கணித பேராசிரியரான சங்கரபாண்டியன் 2021ம் ஆண்டுக்கான GATE தேர்வில் இரண்டு விருப்பபாடங்களை தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளார்.

இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் GATE தேர்வில் வெற்றி பெற்றால் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றலாம். எம்.டெக் படிப்புகளை உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கும் GATE நுழைவுத் தேர்வு அவசியமாகிறது. இந்த தேர்வுக்கு பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் விண்ணப்பித்து எழுதும் நிலையில், 67 வயதான சங்கரபாண்டியன் அண்மையில் நடைபெற்ற GATE தேர்வில் இரண்டு பாடங்களை தேர்வு செய்து, தேர்வெழுதி வெற்றியும் பெற்றுள்ளார். GATE தேர்வு எழுத வயது வரம்பு கிடையாது.

இந்து கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், 2021ம் ஆண்டுக்கான GATE தேர்வு எழுத கணிதம் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் விண்ணப்பித்துள்ளார். தேர்வு முடிவுகளில் கணிதத்தில் 338 மதிப்பெண்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 482 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஒரே ஒரு பாடத்தை மட்டுமே தேர்வு செய்யும் நிலையில், இவர் இரண்டு பாடங்களை தேர்வு செய்துள்ளார். ஒரே நாளில் காலை மற்றும் மதியம் என இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டியிருக்கும்.

இது குறித்து பேசிய சங்கரபாண்டியன், 2 பேருக்கு தகப்பனாகவும், 3 பேரக்குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளார். ஆக்மென்டெட் ரியாலிட்டி குறித்து ஆய்வில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த அவர் கேட் தேர்வு அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் இருப்பதால் சுமார் 30 நாட்களுக்கும் குறைவாக மட்டுமே தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். தேர்வில் வெற்றி பெறவில்லையென்றாலும் கூட கவலைபட்டிருக்க மாட்டேன் என கூறியுள்ள சங்கரபாண்டியன், மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்திருப்பேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் டிகிரி வாங்குவதற்காக அல்லது சம்பளம் பெறுவதற்காக இந்த தேர்வை எழுதவில்லை. என்னுடைய அறிவை விரிவுபடுத்திக்கொள்ள தேர்வு எழுதினேன். ஆன்மென்டெட் ரியாலிட்டி ஆய்வும் என்னுடைய அறிவை மேலும் உயர்த்திக்கொள்வதற்காக செய்ய உள்ளேன். தேர்வு எழுத சென்றபோது பலரும் என்னை ஒரு தேர்வாளராக பார்க்கவில்லை. நான் யாரையாவது அழைத்து வந்திருப்பேன் என எண்ணிணார்கள். தேர்வு அறையிலும் தேர்வு கண்காணிப்பாளர் அப்படியே பார்த்தார். ஆனால், நான் தேர்வு எழுதுவதை குறிக்கோளாக் கொண்டு தேர்வு எழுதினேன். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள எப்போதும் ஆர்வமாக இருக்க வேண்டும். என்னுடைய பேரக் குழந்தைகளுக்கும் அதனை கற்றுக் கொடுக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

Also read... சண்டிகர் டூ சென்னை - 60 வயது நண்பர்களின் பயண அனுபவம்!

35 ஆண்டுகளுக்கு முன்பு GATE தேர்வில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ள சங்கரபாண்டியன், அந்த தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி காரக்பூரில் அட்மிஷன் கிடைத்ததாக கூறியுள்ளார். தேர்வு முறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். வினாத்தாளில் தவறான கேள்வி மற்றும் விடைகள் இருந்தால், தேர்வு குழுவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வசதி தற்போது இருப்பதாக கூறிய அவர், அப்போது அந்த வசதிகள் இல்லை எனக் கூறியுள்ளார். தெரியாத விஷயங்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் தவறில்லை எனக் கூறும் சங்கரபாண்டியன், உரிய முயற்சியை எடுத்து படித்தால் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறலாம் எனக் கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: