Home /News /education /

கொரோனா காரணமாக கற்றல் இடைவெளி... 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு

கொரோனா காரணமாக கற்றல் இடைவெளி... 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு

 மதிப்பீட்டுத் தேர்வு

மதிப்பீட்டுத் தேர்வு

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்க பயிற்சிக் கட்டகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த
    பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    கொரொனோ தொற்றின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்  தடைபட்டு ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். தொற்று பரவல் குறையத் தொடங்கியதையடுத்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நேரடியாக சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பினால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்க பயிற்சிக் கட்டகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    முதல் கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம்,கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரிதாவரவியல், விலங்கியல், உயிரிவிலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல், ஆகிய பாடங்களுக்கும் தலா 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க:  கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு: நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சாட்டை முருகன் மீண்டும் கைது


    9 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் மதிப்பீட்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் மதிப்பீட்டுத் தேர்வை வரும் 12-ம்தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிக்குள் ஒருமணி நேரம் காலஅவகாசம் வழங்கிநடத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ஒரு குழு மாணவர்களுக்கான மதிப்பீடு தேர்வு முடிந்த பின்னர் அடுத்தடுத்த குழு மாணவர்களை அமரவைத்து இணைய வசதியை பயன்படுத்தியும் இந்த மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும். இதற்கான உரிய அறிவுரைகளை அனைத்து அரசுப் பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கும் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: தமிழகத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Education, News On Instagram, School students

    அடுத்த செய்தி