• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • ஐஐடி-யில் படிக்க விருப்பமா? இப்போது கலை, வர்த்தகம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை ஆரம்பம்!

ஐஐடி-யில் படிக்க விருப்பமா? இப்போது கலை, வர்த்தகம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை ஆரம்பம்!

மாதிரி படம்

மாதிரி படம்

மாஸ்டர் ஆஃப் டிசைன் என்பது வடிவமைப்பில் இரண்டு வருட முதுகலை பட்டப்படிப்பு ஆகும். இது வடிவமைப்பு படிப்புகளில் நிபுணத்துவம் பெறுவதாகும்.

  • Share this:
ஐஐடியில் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம் படிக்க வேண்டும் என்பது பல மாணவர்களுக்கு ஒரு இலக்காகவே இருக்கும். நான் ஐஐடியில் படிக்கிறேன் என்ற பிராண்ட் பெயரைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதை ஒவ்வொருவரும் பெருமிதமாக நினைப்பார்கள். ஆனால் தொழில்நுட்பம் அல்லாத பாடப்பிரிவில் படித்து வந்த மாணவர்களுக்கு ஐஐடி-யில் சேரும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஏனெனில், IIT தொழில்நுட்பம் சார்ந்த படப்பிரிவுகளையே கொண்டுள்ளன. இருப்பினும் பல ஐஐடி கல்லூரிகள் கலை மற்றும் வணிகப் பின்னணி கொண்ட மாணவர்களுக்கு வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் பிற பாடப்பிரிவுகளில் சேரும் வாய்ப்பை வழங்குகின்றன. அவற்றை குறித்து விரிவாக காண்போம்.

இளங்கலை வடிவமைப்பு (B.Des) - Bachelor of Design (B.Des)

வடிவமைப்பு பிரிவில் இளங்கலை பட்டம் என்பது வடிவமைப்பு கொள்கைகள் (design principles), படங்கள் மற்றும் புகைப்படம் எடுத்தல் (images and photography) ஆகியவற்றைக் கற்பிக்கும் நான்கு ஆண்டு இளங்கலைத் திட்டமாகும். இளங்கலை பொது நுழைவுத் தேர்வு (UCEED) மூலம் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். இந்த தேசிய அளவிலான நுழைவுத் தேர்வானது ஐஐடி பம்பாயால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் காட்சிப்படுத்தல் மற்றும் இடஞ்சார்ந்த திறன், வடிவமைப்பு சிந்தனை மற்றும் ப்ரோப்லம் சால்விங், கவனிப்பு மற்றும் வடிவமைப்பு உணர்திறன், பகுப்பாய்வு மற்றும் தர்க்க ரீதியான பகுத்தறிவு, மொழி மற்றும் படைப்பாற்றல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக விழிப்புணர்வு போன்ற பாடங்களை உள்ளடக்கிய கேள்விகள் கேட்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வடிவமைப்பு பிரிவில் சேருவதற்கான இடங்களை பொறுத்தவரை, ​​ஐஐடி பாம்பேயில் - 37 இடங்கள், ஐஐடி ஹைதராபாத்தில் - 20 இடங்கள் மற்றும் ஐஐடி கவுகாத்தியில் - 56 இடங்கள் உட்பட மூன்று ஐஐடிக்கள் இந்த பாடத்திட்டத்தை வழங்குகின்றன. இதுதவிர ஐஐடி டெல்லியில் அடுத்த கல்வியாண்டில் பிடிஎஸ் பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூடுதலாக, ஜபல்பூரின் இந்திய தகவல் தொழில்நுட்பம் - 66 இடங்களுடன் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஆகிய படிப்பை வழங்குகிறது.

தகுதி: மேற்கண்ட பாடப்பிரிவில் சேர ஒருவர் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 24 வயதிற்குட்பட்ட எந்தவொரு வேட்பாளரும் இந்தப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை எழுதலாம்.

மாஸ்டர் ஆஃப் டிசைன் - Master of Design (M.Des)

மாஸ்டர் ஆஃப் டிசைன் என்பது வடிவமைப்பில் இரண்டு வருட முதுகலை பட்டப்படிப்பு ஆகும். இது வடிவமைப்பு படிப்புகளில் நிபுணத்துவம் பெறுவதாகும். இந்த படிப்பில் மனிதநேயம் மற்றும் வணிக பின்னணி கொண்ட மாணவர்கள் கூட சேரலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் வடிவமைப்பு முதுகலை படிப்புகளில் சேர CEED தேர்வுகளை எழுத வேண்டும். தற்போது, ​​ஜபல்பூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் என்ற முதுகலை படிப்பை வழங்குகிறது. இதுதவிர இந்த ஐஐடி பாம்பே, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி கவுகாத்தி, ஐஐடி டெல்லி, ஐஐடி கவுகாத்தி மற்றும் ஐஐடி கான்பூர் ஆகியவை இந்த முதுகலை படிப்பை வழங்குகின்றன.

தகுதி: குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் பட்டப்படிப்பு, டிப்ளமோ அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்த எந்தவொரு விண்ணப்பதாரரும் இந்த முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். கல்லூரிகள் அவர்கள் தேர்வு செய்ய விரும்பும் பாடத்திற்கு ஏற்ப மேற்படி திட்டத்தின் சிறப்பைக் குறிப்பிடலாம். கூடுதலாக, ஜிடி ஆர்ட்ஸ் டிப்ளமோ திட்டத்தில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களும் சிஇஇடி தேர்வை எடுக்க தகுதியுடையவர்கள்.

Also read... 10, 12ம் வகுப்பு படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்

எம்ஏ ஸ்பெஷலைசேஷன்: (MA specialisation)

மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸின் இரண்டு ஆண்டு முதுகலை திட்டம் மொழி, சமூக பணி, அரசியல் அறிவியல், சமூகவியல், புவியியல், தத்துவம் மற்றும் பிற ஸ்பெஷலைசேஷன் பிரிவுகளைக் கொண்டுள்ளது . இந்தப் படிப்புகளின் பாடங்களை மன்னர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தற்போது, ​​ஐஐடி காந்திநகர், ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி கவுகாத்தி ஆகிய மூன்று ஐஐடிக்கள் மட்டுமே இந்த படிப்புகளை வழங்குகின்றன. இந்த ஐஐடிகள் ஒவ்வொன்றும் அதன் சொந்த எழுத்துத் தேர்வு மற்றும் எம்ஏ சேர்க்கைக்கான நேர்காணல் செயல்முறையை நடத்தி இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறது.

தகுதி: ஐஐடி வழங்கும் எம்ஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, நீங்கள் விண்ணப்பிக்கும் கல்லூரி அல்லது திட்டத்தில் குறைந்தபட்ச சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை வணிக நிர்வாகம் (Master of Business Administration)

எம்பிஏவில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் பல ஐஐடிக்களால் வழங்கப்படும் மேலாண்மை படிப்புகளிலும் சேரலாம். இந்த படிப்புகளுக்கான சேர்க்கை CAT இல் வேட்பாளரின் செயல்திறன் மற்றும் குழு விவாதம் மற்றும் தனிப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது, ​​ஐஐடி பம்பாய், ஐஐடி டெல்லி, ஐஐடி மெட்ராஸ், ஐஐடி ரூர்கி, ஐஐடி கான்பூர், ஐஐடி தன்பாத், ஐஐடி கரக்பூர் மற்றும் ஐஐடி ஜோத்பூர் உள்ளிட்ட எட்டு ஐஐடிகளில் எம்பிஏ திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: