தமிழகத்தில் கலை-அறிவியல் கல்லூரி சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

143 கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 10 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

 • Share this:
  தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. இம்மாதம் 10ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

  அதற்காக இரண்டு இணையதளங்களை கல்லூரி கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்ற மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 48 ரூபாயும், பதிவுக் கட்டணமாக 2 ரூபாயும் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை இணையம் மூலம் செலுத்த முடியாத மாணவர்கள் டி.டி. எடுத்து அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணையம் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  அதன்படி, 143 கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 10 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தளங்களில் விண்ணப்பங்களை www.tngasa.org, www.tngasa.in என்ற இணையதயத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதேபோல, பொறியியல் படிப்புகளில் சேரவும் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்திருப்பதை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் இன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. அங்கே, கல்லூரிகளை மட்டும் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. பட்டப்படிப்பு, பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாக அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

  கல்லூரிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், கொரோனா பாதிப்பு இன்னும் இருந்து வருவதால் ஆன்லைன் மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட இருக்கிறது. மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு நேரிடையாக வந்தும் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

  ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வகுப்பறையில் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளி விட்டு அமருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  Must Read : இனி அரசு ஊழியர்கள் கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது... செக் வைத்த அரசு

  இந்நிலையில், கர்நாடகாக மாநிலம் முழுவதும் 80 சதவீதம் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பிற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  கர்நாடகாவில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. எனினும் அங்கே, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: