Home /News /education /

'சென்னை ஐ.ஐ.டியில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது' - இயக்குநர் காமகோடி

'சென்னை ஐ.ஐ.டியில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது' - இயக்குநர் காமகோடி

சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி

சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி

IIT Madras : ஐ.ஐ.டியில் படித்த மாணவர்கள் முன்பு 70-80% பேர் வெளிநாடுகளுக்கு சென்றனர். ஆனால் தற்போது 10-20% மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் என இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டியில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதாக இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி ( Chennai IIT ) தொடர்ந்து 4வது ஆண்டாக ஒட்டுமொத்த நிறுவனங்களில் முதல் இடத்தில் உள்ளது. பொறியியல் நிறுவனங்கள் தர வரிசையில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளது. கற்றல் ஆதாரங்கள், மாணவர்களுக்கு கிடைக்கும் சராசரி சம்பளம், வேலை வழங்கும் நிறுவனங்களின் கருத்து, அனைத்து மாணவர்களுக்கும் உகந்ததாக உள்ளதா நிறுவனம் என பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது.

ஐ.ஐ.டி யில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்து விடும். ஆனால் மாணவர்கள் அவரவர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில் இருக்கும். அப்போது வளர்ச்சி ஏற்படும். சிவில் பொறியியல் மாணவர்க்கு அவர் படித்த படிப்புக்கு மற்ற படிப்புக்கான வேலைகளை விட குறைவான சம்பளத்தில் தான் வேலை கிடைக்கும்.

ஐ.ஐ.டி யில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence ) மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது. அதில் புதிதாக ஏதேனும் ஒரு கருத்து பதிவிட்டால், அதே போன்ற கருத்து, ஆய்வு உலகில் வேறு எங்கு நடைபெறுகிறது, இந்த ஆய்வின் இறுதிபொருள் சந்தைக்கு தேவைப்படுமா என கூறும். இதன் மூலம் பல பொருட்களுக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளோம். மற்ற கல்வி நிறுவனங்களும் இதை பின்பற்றலாம். ஐ.ஐ.டி யில் நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் B.Sc Data science படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்கள் 192 பேருக்கு பயிற்சி வழங்கியுள்ளோம்.

ALSO READ | காஞ்சிபுரம் IIITDM நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

அதிவேக ரயில்கள் இயக்க தைய்யூரில் உள்ள சென்னை ஐ.ஐ.டி  வளாகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மனித கழிவுகளை அகற்ற இயந்திரம் உருவாக்கி, அதில் முதல் இயந்திரத்தை கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நபரின் மனைவிக்கு கொடுத்துள்ளோம். மேலும் சில இயந்திரங்கள் உருவாக்கி வருகிறோம்.
வருங்காலத்தில் 6ஜி வரும் போது உலக நாடுகள் ஒரு நாளுக்கு இரண்டு செயற்கைகோள் விண்ணில் செலுத்த வேண்டியிருக்கும்.

அதாவது ஓராண்டுக்கு 20,000 , ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் செயற்கைகோள்கள் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கான launch pad செயற்கைகோள்கள் தயாரித்து தருகிறோம். ஐ.ஐ.டியில் படித்த மாணவர்கள் முன்பு 70-80% பேர் வெளிநாடுகளுக்கு சென்றனர். ஆனால் தற்போது 10-20% மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் என இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: IIT Madras

அடுத்த செய்தி