Home /News /education /

அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் கலை- பண்பாடு கொண்டாட்டம்.. தொடக்க விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் கலை- பண்பாடு கொண்டாட்டம்.. தொடக்க விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு

கலை- பண்பாடு கொண்டாட்டம்

கலை- பண்பாடு கொண்டாட்டம்

Art and Culture InTN Govt Schools: தமிழக அரசு பள்ளிகளில் நுண்கலைகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்கள் இவற்றை கற்பதற்கென ஒவ்வொரு வாரத்திலும் இரு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

    பள்ளி மாணவர்களின் கலைத் திறனை வளர்க்கும் விதமாக கலை-பண்பாடு கொண்டாட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. இதன் தொடக்க விழா காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.  அவற்றுள் ஒன்றாக நுண்கலைகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்கள் இவற்றை கற்பதற்கென ஒவ்வொரு வாரத்திலும் இரு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    பள்ளிக்கு அருகில் உள்ள நடன, நாடக, இசைக் கலைஞர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் மூலமாக, இக்கலைகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பள்ளி அளவில் கலைவிழாக்கள் நடத்தப்பட்டு அதில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வட்டார அளவிலான கலைத் திருவிழாக்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதில் வெல்பவர்கள் மாவட்ட அளவிலான கலைவிழாக்களிலும் அதன் வெற்றியாளர்கள் ஆண்டு இறுதியில் மாநில அளவில் நடக்கும் கலைத் திருவிழாவிலும் பங்குகொள்வார்கள்.

    இதில் சிறார் அரங்கம், நடனம், பொம்மலாட்டம், நாட்டுப்புறக் கலைவடிவங்கள் என அனைத்தும் அரசுப் பள்ளிகளில அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஏற்கனவே பள்ளிகளில் மாதமொரு முறை சிறார் திரைப்படங்களை  திரையிடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி சம்பவம் - அரசின் உத்தரவை மீறி மூடப்பட்ட 987 பள்ளிகளுக்கு நோட்டீஸ்..!

    கலை- பண்பாடு கொண்டாட்டம் முன்னெடுப்பின் கீழ், சமூக விழிப்புணர்வைத் தரும் பாடல்களை தமிழிசை வடிவத்தில் மாணவர்கள் கற்பார்கள்.  உடுக்கை, பறை, ஒயில், கரகாட்டம், கும்மி போன்ற பாரம்பரிய கலைகளும்,  மயிலாட்டம், தேவராட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட நடன வகைகளும், பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, கூத்து, நாடகம், தெருக்கூத்து போன்ற அரங்கக் கலைகளும்,  வரைதல், ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்தல், குறும்படங்களை உருவாக்குதல் போன்ற காட்சிக் கலைகளும் (Visual Arts) அரசுப் பள்ளிகளில் கற்றுத் தரப்படும்.

    இதையும் படிங்க: 'சென்னை ஐ.ஐ.டியில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது' - இயக்குநர் காமகோடி

    மாணவர்களிடையே நிகழ்த்துக் கலைகளுக்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம், அவர்களின் திறனும் படைப்பாற்றலும் வெளிப்படுவதும், கலைகளின் மூலம் நுண்ணுணர்வு பெறுதலும், ஒருங்கே நடைபெறும்.   தமிழ்நாட்டு பள்ளிக் கல்வியின் வரலாற்றில் இந்த முயற்சி இது வரை நடக்காத ஒன்ற என்று பாராட்டப்படுகிறது.

    இந்நிலையில், கலை- பண்பாடு கொண்டாட்டத்தின் தொடக்கவிழா காஞ்சிபுரம் மாவட்டம் ஜமீன் தண்டலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, Government school, Tn schools

    அடுத்த செய்தி