கற்றல் முறைகள் மாற்றம் பெறுகின்றனவா? ஆன்லைன் வழிக்கல்வியின் எதிர்காலம் என்ன?

விர்ச்சுவல் வகுப்பறைகள்தான் இனி உலகின் கல்வி எதிர்காலம் என்கின்றனர் சர்வதேச கல்வியாளர்கள்.

கற்றல் முறைகள் மாற்றம் பெறுகின்றனவா? ஆன்லைன் வழிக்கல்வியின் எதிர்காலம் என்ன?
மாதிரிப்படம்
  • Share this:
உலக அளவில் இன்றைய சூழலில் கொரோனா அச்சத்தால் பள்ளி, கல்லூரி என அத்தனைக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பல கல்வி நிறுவனங்களும் தங்களது மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டன.

இத்தகைய சூழலில் ’விர்ச்சுவல் வகுப்பறைகள்’ அதிகப்படியாகவே உருவாகிவிட்டன. விர்ச்சுவல் வகுப்பறைகள் என்றால் ஆன்லைன் வழிக்கல்வி என்பதுதான். அவசர காலத்தில் இதுபோன்ற கல்வி முறைக்கு மாறியுள்ளோம் எனப் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், விர்ச்சுவல் வகுப்பறைகள்தான் இனி உலகின் கல்வி எதிர்காலம் என்கின்றனர் சர்வதேச கல்வியாளர்கள். இந்தியாவில் இன்னும் பல நகரங்களில் இதுபோன்ற ஆன்லைன் கல்வி குறித்த அறிமுகங்கள் இன்னும் ஏற்படவில்லை. ஆனால், மெட்ரோ நகர மாணவர்கள் எல்லாம் இந்த விர்ச்சுவல் வகுப்புறை முறைக்குத் தயாராகியே உள்ளனர்.


அனைத்துப் பாடங்களுக்கும் வீடியோ மற்றும் பட விளக்கங்கள் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. சில நேரம் ஆசிரியர்களே நேரடியாக வீடியோ மூலம் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கின்றனர். தனியே செயலி மூலம் வீட்டுப்பாடம், தேர்வு, பாடக்குறிப்புகள் என அத்தனையும் வழங்கப்படும்.

மாணவர்களின் சந்தேகங்களையும் ஆன்லைன் வாயிலாகவே ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற முடியும். இதெல்லாம் தற்போது சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் தற்போதே நடைமுறையில் உள்ளன. இன்னும் தொழில்நுட்ப மேம்பாடுகள் ஏற்படும் போது ஆன்லைன் வழிக்கல்விக்கான வரவேற்புகள் அதிகம் ஆகும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

மேலும் பார்க்க: அடுத்த 3 மாதங்களுக்கு ஏ.டி.எம்-களிலிருந்து பணம் எடுக்க கட்டணம் இல்லை!
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading