Home /News /education /

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் - பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் - பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

ஆசிரியர்

ஆசிரியர்

தற்காலிக ஆசிரியராக தேர்வானோர் வரும் 20-ம் தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவில் தெரிவித்துள்ளது.

    தற்காலிக ஆசிரியர் நியமனம் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRB நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 15-ம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

    தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வரும் 18-ம் தேதிக்குள் CEO-க்கள் ஒப்புதல் தர வேண்டும். தற்காலிக ஆசிரியராக தேர்வானோர் வரும் 20-ம் தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட 24 மாவட்டங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ALSO READ | இந்திய அஞ்சல்துறை சார்பில் "இந்தியா 2047" கட்டுரை போட்டி: முதற் பரிசு ரூ.50,000

    சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை/பட்டதாரி/முதுநிலை பணியிடங்களை நிரப்புவது தொடர்பான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் முன்னதாக வெளியிட்டார்.

    அதன்படி, பள்ளிக்கல்வித் துறையால் வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் அடிப்படையில் தற்காலிக நியமனங்கள் நடைபெற வேண்டும் என்றும், ஒரு காலியிடத்துக்கு  ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கும் போது இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்துவருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Department of School Education, Tn schools

    அடுத்த செய்தி