Home /News /education /

உயர்கல்வி படிப்பு: கல்விக்கடன் பற்றித் தெரிந்து கொள்வோம்

உயர்கல்வி படிப்பு: கல்விக்கடன் பற்றித் தெரிந்து கொள்வோம்

கல்வி கடன்கள்

கல்வி கடன்கள்

இத்திட்டத்தின் கீழ், மூன்றாம் நபர் பிணை, அடமானம் போன்ற எவ்வித நிர்பந்தனைகள்  இல்லாமல் ரூ.7.5 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படும்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    உயர் கல்வியில்  மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிஇ.,பி.டெக் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 1 லட்சத்தி 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த கலந்தாய்வின்  மூலம் சேர்க்கை பெற  இருக்கின்றனர். மாநிலத்தில் 90%க்கும் அதிகமான பொறியியல் இடங்கள் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் வசமிருப்பதால், கலந்தாய்வு மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் வரை (அனைத்தையும் உள்ளடக்கிய செலவினங்கள்) செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.

    கடந்த 7ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவில், 67, 787 மாணவர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். தமிழகத்தில் மொத்தம் 10,725 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், 5500 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், 5225 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன. தனியார் கல்லாரிகளில் உள்ள எஞ்சிய இடங்களில், 50% இடங்கள் அரசு கல்லூரிக்கு இணையான நியாயமான கல்வி கட்டணம் வசூலிக்கப்படும் என்று மருத்துவ கல்வி ஆணையம் ஆணையிட்டுளளது. இருப்பினும், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கல்விக் கட்டணம் முடிவுகள் மாணவர்களுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில், மாநிலத்தின் 75% எம்பிபிஎஸ் இடங்கள்,நியாயமான விலையில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இருப்பினும், இந்த 75% இடங்கள் விளிம்பு நிலையில் இருக்கும்  மாணவர்களுக்கு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    நீட் தேர்வுக்கு முந்தைய காலங்களிலும், மருத்துவ சேர்க்கைப்  பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவில் தான் இருந்தது. நீட் தேர்வுக்குப் பின்பு அரசுப் பள்ளி மாணவர்கள் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்தனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பின்னர், இந்த நிலை சற்று மேம்பட்டுள்ளது.

    2020-21ல் 7.5% இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட பின்பு தான் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தன.


    இந்தாண்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளில்,  அரசுப் பள்ளி மாணவர்கள் 300- 400 வரை சேர்க்கை பெறலாம் என்று கணிக்கப்படுகிறது.

    எனவே, பெரும்பாலான மாணவர்கள் கல்விகடன் பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். எனவே, கல்விக்கடன் பற்றியத் தகவலை மாணவர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமானதாகும்.

    கல்விக்கடன்: 

    இந்திய வங்கிகள் கூட்டமையப்பு மாதிரி கல்விக் கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ்,  நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் இணைய வாயிலாக கல்விக் கடன் பெற மத்திய அரசு வித்யாலட்சுமி என்ற போர்டலை (www.vidyalakshmi.co.in/Students) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போர்ட்லின் கீழ், பதிவு செய்துள்ள 40 வங்கிகள் மூலம் 100க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள், இந்த போர்ட்லின் மூலம்  உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து மிக எளிமையான முறையில் கல்விக் கடன் பெறலாம்.

    மாதிரி கல்விக் கடன் திட்டம்(Model Education Loan Scheme) 

     



























    கடன் தொகைபங்குத்  தொகைஅடமானம்திரும்பிச் செலுத்தும் காலம்
    ரூ. 4 லட்சம் வரைதேவையில்லைதேவையில்லை10 ஆண்டுகள் வரை
    ரூ.4 லட்சம் முதல் 7 லட்சம் வரை

    5% பயனாளி பங்குத்தொகையாக செலுத்த வேண்டும்

    வெளிநாட்டில் பயில 15% பங்குத் தொகையாக செலுத்த வேண்டும்


    மாணவர், பெற்றோர் மற்றும் மூன்றாம் நபர் ஜாமீன்தார் பிணை கையெழுத்திட வேண்டும்

     

    மூன்றாம் தரப்பு பிணை கோருவது அந்தந்த வங்கிகளின் தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டது.

    மேலும், மத்திய அரசின்   (CENTRAL SECTOR INTEREST SUBSIDY SCHEME) திட்ட பயனாளிகள் மூன்றாம் நபர் பிணை வழங்க தேவையில்லை
     10 ஆண்டுகள் வரை திருப்பச் செலுத்தலாம்
    ரூ. 7.50 லட்சத்திற்கு மேல்அந்தந்த வங்கிகளின் தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டது.அடமானம் தேவை10 ஆண்டுகள் வரை திருப்பச் செலுத்தலாம்

    மாதிரி கல்விக் கடன் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறும் மாணவர்களுக்கு, மத்திய அரசு வட்டி மானியத் திட்டத்தை (CENTRAL SECTOR INTEREST SUBSIDY SCHEME)  செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ், மூன்றாம் நபர் பிணை, அடமானம் போன்ற எவ்வித நிர்பந்தனைகள்  இல்லாமல் ரூ.7.5 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படும். தவணை காலம் (Moratorium period course period + 1 year) படிப்பு முடித்த ஓராண்டிற்கு பிறகு தொடங்கும். அதுவரை, வட்டித் தொகையை மானியமாக அரசு செலுத்தும். தவணை காலத்திற்குப் பிறகு  நிலுவையில் உள்ள கடன் தொகைக்கு ஏற்ப வட்டி செலுத்தினால் போதுமானது.

    இதையும்  வாசிக்க: நீட் தேர்வு: ஏ.கே ராஜன் குழு அறிக்கை உணர்த்துவது என்ன?

    NAAC,NBA, CFTI போன்ற மதிப்பீடு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறிகளுக்கு மட்டும் இந்த மானியத் திட்டம் பொருந்தும். பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்துக்கும் குறைவானதாக இருக்க வேண்டும். எம்பிபிஎஸ், செவிலியர் படிப்புகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது

    மேலும், விவரங்களுக்கு: 

    Evaluation of Central Sector Interest Subsidy (CSIS) to cover more students from economically weaker sections   

    CENTRAL SECTOR INTEREST SUBSIDY SCHEME, 2009

    வங்கிக்கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்   
    Published by:Salanraj R
    First published:

    Tags: Education

    அடுத்த செய்தி