இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி கலந்தாய்விற்கு இம்மாதம் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.பொறியியல் கலந்தாய்விற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி இறுதி நாள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 8ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் கூறிய அமைச்சர் பொன்முடி, ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் கூறினார்.
Must Read : கேரளா தங்கம் கடத்தலில் பினராயி விஜயன், குடும்பத்தினருக்கு தொடர்பு... ஸ்வப்னோ சுரேஷ் அதிர்ச்சி தகவல்
மேலும், முதல் 15 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் 7 நாட்களில் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.