ஹோம் /நியூஸ் /கல்வி /

ராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர நுழைவுத் தேர்வு அறிவிப்பு :யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர நுழைவுத் தேர்வு அறிவிப்பு :யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி

Rashtriya Indian Medical college Examination: இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்திய ராணுவத்தின் மிக உயரிய  பொறுப்புகளில் வரக்கூடியவர்களாக உள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜுலை  20223 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற (அல்லது) படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுத்திகிறது.

  இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் இந்த கல்வி நிறுவனம், இந்திய ராணுவத்தின் (தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி) மனித வளங்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்திய ராணுவத்தின் மிக உயரிய  பொறுப்புகளில் வரக்கூடியவர்களாக உள்ளனர்.

  அகில இந்திய அளவில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

  எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும்.

  எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

  யார் விண்ணப்பிக்கலாம்?

  விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் 01.07.2023 அன்று 11 1/2 வயது நிரம்பியராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது 02.07.2010-க்கு முன்னதாகவும்,01.01.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது. சேர்க்கையின்போது. 01.07.2023-ல் அங்கீகரிக்கப்பெற்ற பள்ளியில் (Recognized School) ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

  விண்ணப்பப் படிவம்:  இதற்கான விண்ணப்பப் படிவம், தகவல் கையேடு (Prospectus) மற்றும் முந்தைய வினாத்தாள்களின் நகல்களை rmic.gov.in என்ற இணைய தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.  விண்ணப்பக் கட்டணம் ரூ.600, எஸ்சி/எஸ்டி சான்றிதழ் மாணவர்களுக்கு ரூ.550 ஆகும்.

  அஞ்சல் வாயிலாக பெற விரும்புவோர்,  THE COMMANDANT RIMC DEHRADUN”, DRAWEE BRANCH, STATE BANK OF INDIA, TEL BHAVAN, DEHRADUN, (bank Code 01576), UTTARAKHAND என்ற பெயருக்கு வரைவோலையாக (Demand Draft) எடுத்து "The Rashtriya Indian Military College, Garhi Cantt, Dehradun, Uttarakhand, PIN-248 003” என்ற முகவரிக்கு விண்ணப்பக் கட்டணத்தை டிடி - ஆக     அனுப்ப வேண்டும்.

  இதையும் வாசிக்கஎல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: வெளியானது அரசாணை!

  பூர்த்தியான விண்ணப்பங்களை, (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்காநகர், சென்னை - 600003 என்ற முகவரிக்கு 15.10.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

  Notification

  Published by:Salanraj R
  First published:

  Tags: Army School, School Admission