மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், குழந்தைகள், 2022-2023 ஆம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ. 1000/- முதல் ரூ. 25000/- வரை, கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இதற்காக https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை, சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.
மேலும் விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.09.2022. மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022.
இதையும் வாசிக்க: வரும் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்புத் தேர்வுகள் எப்போது தொடங்கும்: சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு
மேலும் விவரங்கள் பெற அணுக வேண்டிய முகவரி : மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி, சென்னை – 600032. மின்னஞ்சல் - scholarship201718tvl@gmail.com தொலைபேசி எண்: 044-29530169
இதையும் வாசிக்க: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாகிறது?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய நல ஆணையர் பெ. அருண் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.