Home /News /education /

உயர் கல்வி மாணவர்களுக்கான உதவித் தொகை.. இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

உயர் கல்வி மாணவர்களுக்கான உதவித் தொகை.. இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை

50 சதவிகிதம் ஆண்கள்: 50 சதவிகிதம் பெண்கள் என்ற அளவிலும்;  3(அறிவியல்) :1 (வணிகம்) : 3 (மனித நேயம்) என்ற  விகிதாச்சார  அடிப்படையில் தகுதிப் பட்டியல்  தயாரிக்கப்படும். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேரவுள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியக் கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை 'Central Sector Scheme of Scholarship for College and University Students' என்ற திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    அடிப்படைத் தகுதிகள்: 

    12ம் வகுப்பில் 80%க்கும் மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்;

    பெற்றோரின் ஆண்டு வருமான ரூ. 4.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்;

    வேறு கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெறக் கூடாது;

    முழு நேர அளவில் உள்ள படிப்புகளுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை திட்டம் பொருந்தும்; டிப்ளமோ மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

    தகுதி பட்டியல் விவரம்: 

    50 சதவிகிதம் ஆண்கள்: 50 சதவிகிதம் பெண்கள் என்ற அளவிலும்;  3(அறிவியல்) :1 (வணிகம்) : 3 (மனித நேயம்) என்ற  விகிதாச்சார  அடிப்படையில் தகுதிப் பட்டியல்  தயாரிக்கப்படும்.

    வகுப்புவாரி இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். தகுதிப் பட்டியலில் 15 % இடம் பட்டியல் சாதி பிரிவு மாணவர்களுக்கும், 7.5% இடம் பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கும், 27% இடம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் ஒதுக்கப்படும்.

    கல்வி உதவித்தொகை விவரம்:  மூன்று ஆண்டு கொண்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இளங்கலை படிப்புகளுக்கு  ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000  வழங்கப்படும். பி.இ., பி.டெக் போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா 12,000/- ரூபாயும், நான்காவது ஆண்டில் ரூ.20,000-ம் வழங்கப்படும்.

    முதுநிலை படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தலா 20,000 ரூபாய் வழங்கப்படும். நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படும்.

    இதையும் வாசிக்கபொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

    விண்ணப்பம் செய்ய:

    வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் scholarships.gov.in என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  2017-ம் ஆண்டு முதல் ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருவோரும், புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIPS FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS
    Published by:Salanraj R
    First published:

    Tags: Scholarship

    அடுத்த செய்தி