ஹோம் /நியூஸ் /கல்வி /

முதுகலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

முதுகலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மத்திய அரசுப் பட்டியலில் உள்ளவாறு இடஒதிக்கீடு முறை பின்பற்றப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

CUET -PG 2022: முதுகலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்  உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 24 உயர்க்கல்வி நிறுவனங்களில் உள்ள  முதுநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த மே-19  முதல் தொடங்கியது.

பொது நுழைவுத் தேர்வு வரும் ஜுலை மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.nta.nic.in. என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 18-06-2022 ஆகும். செலுத்தப்படும் கட்டணம் நாளை இரவு 11.50 மணி வரை பெறப்படும்.

CUET - PG நுழைவுத் தேர்வில் தேர்வில் கலந்து கொள்ளும் பல்கலைக்கழகங்கள்

ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை:

CUET (UG) 2022 -ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cuet.nta.nic.in/ செல்லவும்.

இதையும் வாசிக்க:  முதுகலை படிப்புகளுக்கு பழைய முறையில் சேர்க்கை தொடரும் - முக்கிய பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு

கல்வி சான்றிதழ், வயது, சாதி சான்றிதழ், இருப்பிடம், சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம் ( 10 kb to 200 kb), கையொப்பம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதையும் வாசிக்க: 

22 மத்திய பல்கலைக்கழகங்கள் CUET - PG தேர்வை ஏற்க மறுத்துள்ளன 

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 800 ஆகும். எஸ்சி/எஸ்டி/ பால் புதுமையினர் விண்ணப்பக் கட்டணமாக  ரூ.500 செலுத்த வேண்டும். பொருளாதார சமூகவாய்ப்பு பெற்ற  ஓபிசி, பொருளாதார பின்தங்கிய வகுப்பினர் ரூ.600 செலுத்த வேண்டும்.

மத்திய அரசுப் பட்டியலில் உள்ளவாறு இடஒதிக்கீடு முறை பின்பற்றப்படும்.

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://cuet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். cucet@nta.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

Registration for CUET(PG)-2022

First published:

Tags: Entrance Exam