Home /News /education /

12ஆம் வகுப்பு மதிப்பெண்களை குறைவாக வழங்கிய ஆசிரியர்கள் மன்னிப்புக் கடிதம்

12ஆம் வகுப்பு மதிப்பெண்களை குறைவாக வழங்கிய ஆசிரியர்கள் மன்னிப்புக் கடிதம்

ஆசிரியர்கள் மன்னிப்புக் கடிதம்

ஆசிரியர்கள் மன்னிப்புக் கடிதம்

TN Education : 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்று கூட்டி பார்த்ததில் ஆசிரியர்கள் கூட்டலில் தவறிழைத்தது தெரியவந்தது

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களைக் குறைத்து போட்ட ஆசிரியர்கள்,  இனிமேல் இதுபோன்ற தவறை செய்யமாட்டோம் என அரசு தேர்வுத் துறைக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதிய மாணவர்கள் பலர்,  விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகல்களை வாங்கி பார்த்தபோது , வாங்கிய மதிப்பெண்களை விட ஆசிரியர்கள் குறைத்து வழங்கியது தெரிய வந்தது .

இந்த விவகாரத்தை பெற்றோர்கள், தேர்வுத்துறை கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அலட்சியமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் , அதனை மேற்பார்வை செய்த அலுவலர்கள் என 80 பேரை  விசாரணைக்கு அழைக்க தேர்வுத் துறை திட்டமிட்டது. இன்று 50 ஆசிரியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். அவர்களிடம் தேர்வுத்துறை இணை இயக்குனர் செல்வகுமார் விசாரணை நடத்தினார் .

அப்போது மாணவர்கள் விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டது  குறித்து, இணை இயக்குனர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் கொடுத்துவிட்டு ஆசிரியர்கள் சென்றனர். எனினும்,  இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி தவறு செய்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்,  பதவி உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் தாங்கள் எழுதிய  விடைத்தாள் நகல்  பெற்று பரிசோதித்ததில் மதிப்பெண்களை கூட்டி வழங்கியதில் ஆசிரியர்கள் இழைத்த  தவறினை சம்பந்தப்பட்ட மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். மே 5ம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது இதனை தொடர்ந்து கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டது அந்தவகையில் தேர்வு முடிவு வெளியான பின்பு  தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று வழங்கப்பட்ட மதிப்பெண்களை பரிசோதித்தபோது இந்த குளறுபடி தெரியவந்துள்ளது.

ALSO READ | நீங்கா மருத்துவ கனவுடன், நீட் தேர்வு எழுதிய மதுரையை சேர்ந்த 56 வயது ராஜ்ஜியகொடி

வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை காட்டிலும் குறைத்து மதிப் பெண்களை ஆசிரியர்கள் வேதியியல் பாடத்தில் 57 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு செய்முறை தேர்வு 30 மதிப்பெண்கள் என 87 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர் விடைத்தாளை சோதித்தபோது 67 மதிப்பெண்கள் வந்துள்ளது 30 செய்முறை தேர்வு மதிப்பெண்களை கூட்டினால் அம்மாணவர் தொண்ணூற்று மதிப்பெண்களை வேதியியல் பாடத்தில் பெற்றிருக்க வேண்டும் ஆனால் விடைத்தாள்களைத் எழுதிய ஆசிரியர்கள் அதன்பின்னர் பரிசோதித்த விடைத்தாள் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் நடைபெற்றுள்ள தவறை உணராமல் தவறான  மதிப்பெண்களை வழங்கியுள்ளனர்.

அதேபோல இயற்பியல் பாடத்தில் மாணவர் ஒருவர் 72 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் விடைத்தாள் பெற்று சோதித்த  பிறகு அம்மாணவர் 82 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
அதேபோல கணினி அறிவியல் பாடத்தில் 85 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் விடைத்தாள்களை பெற்று  மதிப்பெண்களை பரிசோதித்ததில் அவர் தற்போது 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்திய பிறகு சரியாக திருப்பப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க முதல்நிலை மதிப்பீட்டாளர் இரண்டாம் நடை மதிப்பீட்டாளர் முதன்மை மதிப்பீட்டாளர் என ஆசிரியர்கள் தேர்வுத் துறையால் பணியில் அமர்த்தப்படுவர். ஆனால்  இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை கூட்டி தவறாக பதிவுசெய்யப்பட்டதை  யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவந்தது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Education, Tn schools

அடுத்த செய்தி