முகப்பு /செய்தி /கல்வி / அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு: டிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை..

அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு: டிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை..

அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு: டிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை..

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாதம் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்தவெளி வகுப்புகளை நடத்தலாம் என மருத்துவக்குழு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திறந்தவெளி வகுப்புகளை நடத்த சாத்தியம் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் தகுந்த பாதுகாப்புடன் வீட்டிலேயே இருந்து படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

First published:

Tags: Exam, School Reopen, Students, Tamil Nadu