ஹோம் /நியூஸ் /கல்வி /

மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு!

மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு. கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வுகள் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் 43 மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்று திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் செயல்பட்டுவரும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 2020 - 21 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வுகள் தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட், ஜம்மு, ஹரியானா, குஜராத், ஆந்திர பிரதேஷ், அசாம், பஞ்சாப், கேரளா ஆகிய 12 மாநிலங்களை ஒருங்கிணைத்து ஒரே தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக மத்திய தேர்வாணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளான இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரி அறிவியல், பொருளாதாரம் போன்றவைகளும் பி.எஸ்.சி, பி.எட். போன்ற இளங்கலை பட்டப் படிப்புகளும் உள்ளன.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 1 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் செலுத்த செப்டம்பர் 2 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

12 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வுகள் செப்டம்பர் 15, 16 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி http://cucet.nta.nic.in வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுழைவுத் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Entrance Exam