தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் நவம்பர் 12- ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தேர்வுகள் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன.
இந்நிலைவில் வளிமண்டல சுழற்சி காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதன்காரணமாக தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் கடந்த மாதம் அறிவித்தார். இந்த தேர்வுகளுக்கான மாற்றுத்தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுகள் இயக்ககம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.