சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளங்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை வேளாண்மை (B.Sc., (Hons) Agriculture) மற்றும் தோட்டக்கலை (B.Sc., (Hons)) Horticulture பட்ட படிப்புகளுக்கும், வேளாண்மை (Diploma in Agriculture) மற்றும் தோட்டக்கலை (Diploma in Horticulture) பட்டய படிப்புகளுக்குமான தரவரிசை பட்டியலைத் துணை வேந்தர் இராம கதிரேசன் வெளியிட்டார்.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்குத் தனியே தற்காலிக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிரிவுவாரியான ஒதுக்கீடு சீட்டு எண்ணிக்கையின் விவரங்களும் அந்தந்த படிப்புகளுக்கு உரிய இணைய வழியில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வில் கலந்துகொள்ளக் கலந்தாய்வுக் கட்டணம் செலுத்த 02.01.2023 அன்று மாலை 5 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக தரவரிசையில் தேர்வாகியுள்ள மாணவர்கள் கலந்தாய்வுக்கான தொகைகளை ஆன்னைனில் செலுத்தலாம்.
தரவரிசை பட்டியலை https://annamalaiuniversity.ac.in/ என்ற இணையத்தளத்தில் காணலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: University