அரியர் விதிகளை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலை...!

2019-20-ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் இனி முதலாம் ஆண்டு முதல் செமஸ்டரில் அரியர் இல்லாமல் இருந்தால் மட்டுமே 4வது ஆண்டில் பயில அனுமதிக்கப்படுவர்

அரியர் விதிகளை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலை...!
அண்ணா பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: January 30, 2019, 8:01 AM IST
  • Share this:
பொறியியல் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, அரியர் எழுத முன்பிருந்த கட்டுபாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் தளர்த்தியுள்ளது.

பொறியியல் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில், அரியர் தேர்வு எழுதுவதில் அண்ணா பல்கலைக்கழகம் மாற்றம் கொண்டு வந்தது.

2017 புதிய தேர்வு முறைப்படி முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாவிட்டால், அதனை அடுத்து வரும் பருவத்தில் எழுத முடியாது. ஓராண்டு காத்திருந்து மூன்றாவது பருவத்தில்தான் எழுத முடியும் என்ற நிலை இருந்தது.


இந்த புதிய கட்டுப்பாடால், கல்வியாண்டிற்குள் அனைத்து பாடத் தேர்வுகளிலும் தேர்ச்ச பெற முடியாது எனக்கூறி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டு, 2017 தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தோல்வியடைந்த தேர்வை, அடுத்தடுத்த செமஸ்டர்களில் எழுதலாம். கட்டுப்பாடு தளர்த்தபட்டதால், இனி மாணவர்கள் ஒரு செமஸ்டரில் எத்தனை அரியர் வேண்டுமானலும் எழுத முடியும்.இந்த திருத்தத்திற்கு அண்ணா பல்கலைக்கழக கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியதும் உடனடியாக அமலுக்கு வருகிறது. அதேநேரம் வரும் கல்வியாண்டில் புதிய கொள்கை வெளியிடப்பட உள்ளது.

அதன்படி 2019-20-ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் இனி முதலாம் ஆண்டு முதல் செமஸ்டரில் அரியர் இல்லாமல் இருந்தால் மட்டுமே 4வது ஆண்டில் பயில அனுமதிக்கப்படுவர்.

Also See...

First published: January 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்