முகப்பு /செய்தி /கல்வி / எண்ணிக்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகள்: மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

எண்ணிக்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகள்: மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

அண்ணா பல்கலைக் கழகம்

அண்ணா பல்கலைக் கழகம்

பேராசிரியர் எண்ணிக்கை குறைவு, உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயில்பவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வருவதாக புகார்கள் எழுந்தன.

இதனால் 2023-2024ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

பேராசிரியர் எண்ணிக்கை குறைவு, உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சிறப்பாக செயல்படும் 150 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு நேரில் சென்று ஆய்வு செய்யப் போவதில்லை என்றும், பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்க புதிய வழிமுறையை பின்பற்ற அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயில்பவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

First published:

Tags: Anna University