அரியர் தேர்வு விதிகளை மாற்றுவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை!

அரியர் தேர்வுகளை எழுதுவதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அரியர் தேர்வு விதிகளை மாற்றுவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை!
அண்ணா பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: January 26, 2019, 8:54 PM IST
  • Share this:
புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி அடையாதோர், அடுத்த செமஸ்டரில் தேர்வை எழுதலாம் என நடைமுறை 2017-ம் ஆண்டில் மாற்றப்பட்டு, கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டது.

இதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது எனவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப்பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது எனவும் விமர்சனம் எழுந்தது. இதனால் ஓராண்டு காலம் வீணாகிறது எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.


இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன் திரண்ட மாணவ, மாணவிகள் கிரெடிட் முறையை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மாணவர்களிடம் பல்கலைக்கழக பதிவாளர் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக மனுவை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அரியர் தேர்வுகளை எழுதுவதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும், மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் அவர்களது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.Also watch

First published: January 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்