அஜித்துக்கு நன்றி தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம்!

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆளில்லா ஏர் டேக்சியும் அஜித்தின் ஆலோசனையில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு நன்றி தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம்!
தக்‌ஷா குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட அஜித்.
  • News18
  • Last Updated: January 31, 2019, 10:21 PM IST
  • Share this:
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான வடிவமைப்பு குழுவான தக்‌ஷாவின் ஆலோசகராக பங்காற்றிய நடிகர் அஜித் குமாரின் பங்களிப்பு நிறைவடைந்தது. இதையொட்டி, அவருக்கு அப்பல்கலைக்கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி தக்‌ஷா குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித்தை அண்ணா பல்கலைக்கழகம் நியமித்தது. இதையடுத்து  ஆளில்லா விமான வடிவமைப்பு ஆலோசகர் மற்றும் விமானியாக அஜித் கடந்த 10 மாத காலம் பணியாற்றினார்.

அஜித்தின் ஆலோசனையின் கீழ் தக்‌ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக அளவிலான ஆளில்லா விமானங்களை மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தொடர்பான போட்டியில் பங்கேற்று 2-ம் இடம்பிடித்தது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆளில்லா ஏர் டேக்சியும் அஜித்தின் ஆலோசனையில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தக்‌ஷா குழுவுக்கு அளித்த பங்களிப்புக்காக அஜித் குமாருக்கு அண்ணா பல்கலைக்கழகம் நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,  அப்பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அஜித்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.Also watch

First published: January 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்