மாணவர்களின் விடைத்தாள்களை மாற்றிவைத்து முறைகேடு செய்த பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அண்ணா பல்கலை தேர்வுத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வந்தது.

மாணவர்களின் விடைத்தாள்களை மாற்றிவைத்து முறைகேடு செய்த பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!
அண்ணா பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: May 29, 2019, 12:17 PM IST
  • Share this:
அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வுத்துறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வுத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2016, 2017 மற்றும் 2018 -ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வழங்கியது, மறு மதிப்பீட்டின் போது, மாணவர்களின் விடைத்தாள்களை எரித்துவிட்டு மாற்று விடைத்தாள்களை வைப்பது போன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக குரோம்பேட்டை எம்ஐடி, கிண்டி அண்ணா பல்கலை வளாகம், அழகப்பா கல்லூரி மற்றும் கட்டிடக்கலை உள்ளிட்ட கல்லூரிகளில் இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மூன்று பேராசியர்களை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலை துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லுரிகளைச் சேர்ந்த 38 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பார்க்க:
First published: May 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்