Home /News /education /

சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சென்னை அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. விண்ணப்பித்த 1.5 லட்சம் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இடம் பிடித்தவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு, இன்று தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கல்லூரிகளை தேர்வு செய்தல் தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதை தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Anna University, Chennai, Engineering, Engineering counselling

    அடுத்த செய்தி