ஹோம் /நியூஸ் /கல்வி /

மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர்.. புதிய தேதிகளை அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம்!

மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர்.. புதிய தேதிகளை அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம்!

அண்ணா பல்கலைக் கழகம்

அண்ணா பல்கலைக் கழகம்

கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Anna University Semester Exam Time table: கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், வரும் 24 மற்றும் 31-ம் தேதிகளில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் கடந்த வாரம் மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே கரையை கடந்துள்ளது. மாண்டஸ் புயல் கரையைக் கடந்தபோது, கனமழை பெய்தது.

இதனால் கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக் கழகம் ஒத்திவைத்தது.

கனமழை எதிரொலி - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! 

இந்நிலையில், 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள், வரும் 24-ம் தேதியும், 10-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் 31-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Anna University, Cyclone Mandous