இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு, மதிப்பெண் கணக்கீட்டு முறை.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்...

அண்ணா பல்கலைகழகம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு மற்றும் மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு, மதிப்பெண் கணக்கீட்டு முறை.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்...
அண்ணா பல்கலைக்கழகம்.
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 7:28 AM IST
  • Share this:
பொறியியல் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு மற்றும் மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆன்லைன் மூலம் மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்தில் சத்தம் எழுந்தால் மாணவர்களின் தேர்வு செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே மாணவர்கள் கணினி முன்பு அமர வேண்டும்.

தேர்வு எழுதும் மேஜை மீது எந்த பொருட்களும் இருக்கக்கூடாது. குறிப்பாக மாணவர்கள் மாஸ்க் அணியக்கூடாது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


விடைகளை தேர்ந்தெடுக்கும் Optional முறையில் வினாத்தாள் இருக்கும் எனவும், 40 கேள்விகள் இடம்பெற்றுள்ள நிலையில் 30 கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளித்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...அரியர் தேர்வு விவகாரம்: ’மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை’ - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன்எழுத்துத்தேர்வுக்கு 50 மதிப்பெண்களும், அகமதிப்பீடு எனும் Internal முறைக்கு 20 மதிப்பெண்களும், முந்தைய செமஸ்டர் தேர்விலிருந்து 30 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading