தமிழகத்தில் கொரொனோ பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு களுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி காலை மாலை என இருவேளைகளில் தேர்வு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகள் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.கொரொனோ பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் மேலும் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்தில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகின்றது.
Also Read : எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
செமஸ்டர் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அவற்றை பதிவிறக்கம் செய்து தாள்களில் விடைகளை எழுதி மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.