முகப்பு /செய்தி /கல்வி / அரசு சொல்படி இனி அண்ணாப் பல்கலைக்கழகம் செயல்படும் - துணைவேந்தர் வேல்ராஜ்

அரசு சொல்படி இனி அண்ணாப் பல்கலைக்கழகம் செயல்படும் - துணைவேந்தர் வேல்ராஜ்

துணைவேந்தர் வேல்ராஜ்

துணைவேந்தர் வேல்ராஜ்

அரசு சொல்படி அண்ணாப் பல்கலைக்கழகம் செயல்படும் என்று புதிய துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

20 ஆண்டுகளில் அண்ணாப் பல்கலைக்கழககத்தின் மாணவர்கள் நோபல் பரிசு பெறக்கூடியயவர்களாக உருவாகும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அண்ணா பல்கலைக்கழகதின் புதிய துணைவேந்தராக பொறுபெற்றுக்கொண்ட வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 11-வது துணை வேந்தராக வேல்ராஜ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தற்போது இருக்கக்கூடிய பாடத் திட்டம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடியதாக இல்லை என்று கூறிய அவர் இப்போது உள்ள பாடத்திட்டம் 20% மாணவர்கள் மட்டுமே நன்கு பயில கூடிய வகையில் இருப்பதாக தெரிவித்தார்.

மீதம் உள்ள 80% மாணவர்களும் அவர்கள் திறமைக்கேற்ப பாடங்களை கற்கும் வகையில் பாடத் திட்டங்கள் இரண்டு வகையாக மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

அரசு சொல்கிறப்படி இனி வரும் நாட்களில் அரசின் கருத்துக்களை கேட்டு அரசு சொல்கிறப்படி பல்கலைக்கழகம் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் சூரிய சக்திகளை பயன்படுத்தி வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

First published:

Tags: Anna University