Home /News /education /

பொறியியல் மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பட்டம்... மைனர் டிகிரி திட்டத்தை அறிமுக செய்த அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பட்டம்... மைனர் டிகிரி திட்டத்தை அறிமுக செய்த அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

Anna University : மைனர் டிகிரி என்ற புதிய திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    பொறியியல் பயிலும் மாணவர்கள் கூடுதல் தகுதியுடன் வேலைவாய்ப்பை பெறும் வகையில் இரண்டு பட்டங்களை பெறும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களை நவீன தொழில்நுட்ப வேலைகளுக்கு தயார்படுத்தும் வகையில் மைனர் டிகிரி என்ற புதிய திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

    அதன்படி, பின்டெக் மற்றும் பிளாக் செயின் (Fintech and block chain), பொது நிர்வாகம் (Public administration), தொழில்முனைவு (entrepreneurship), பிசினஸ் டேட்டா அனலிஸ்ட் (Buisness data analyst) சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (Environment sustainablity) ஆகிய 5 பாடங்களையும் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 2வது டிகிரி வழங்கப்படும். மாணவர்கள் 2-வது டிகிரிக்கான பாடங்களை மூன்றாவது ஆண்டு முதல் படிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக,  பொறியியல் பாடத்தில் முதன்முறையாக தமிழர் மரபு , தமிழரும் தொழில்நுட்பமும் என்கிற பாடங்களை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, முதலாமாண்டு மாணவர்களுக்கு  தமிழர் மரபு மற்றும் தமிழரின் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்கள் முதல் மற்றும் 2வது செமஸ்டரில்   அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Anna University, Engineering

    அடுத்த செய்தி