முகப்பு /செய்தி /கல்வி / பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் -18ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்

பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் -18ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

Anna University : சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு பொறியியல் படிப்புகளுக்கான பாடம் மாற்றம் செய்யப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலை கழகம் வருகின்ற 18ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறையினர் பங்களிப்பு இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய பாடத்திட்டத்துக்கு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் புதிய பொறியியல் பாடத்திட்டம் வரும் 18ம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

ALSO READ | மத்திய அரசின் கல்வி உதவித்தொகை : சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் - எப்படி பெறுவது?

வேலைவாய்ப்பு, தனித்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்குப் பின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், தொழிற் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல், சராசரி மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணருதல், தொழில்முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.

First published:

Tags: Anna University, Engineering, Engineering student