முகப்பு /செய்தி /கல்வி / பொறியியல் படிப்பில் தமிழர் மரபு, தமிழரின் தொழில்நுட்ப பாடங்கள் - அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் படிப்பில் தமிழர் மரபு, தமிழரின் தொழில்நுட்ப பாடங்கள் - அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு மற்றும்  உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த பாடங்களை வரும் கல்வியாண்டு முதல் பயில உள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பொறியியல் பாடத்தில் முதன்முறையாக தமிழர் மரபு , தமிழரும் தொழில்நுட்பமும் என்கிற பாடங்களை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் பாடத் திட்டங்களை முழுமையாக மாற்றி வடிவமைத்து உள்ளது. அந்த வகையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழர் மரபு மற்றும் தமிழரின் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்கள் முதல் மற்றும் 2வது செமஸ்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டாயம் இந்த பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற நடைமுறையை அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களுக்கு  இன்று பேட்டி அளித்தார். அதில் , இந்த பாடங்களை மாணவர்கள் தமிழில் எழுத வேண்டும். 12ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ முடித்த மாணவர்கள் இந்த பாடங்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் அண்ணாபல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது.

ALSO READ | திமுக மட்டுமே அறிவுசார்ந்த கட்சியாக நினைத்து கொள்ளாதீர்கள் - உச்ச நீதிமன்றம் காட்டம்

அண்ணா பல்கலைக்கழகம் அதன் இணைப்பு மற்றும்  உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த பாடங்களை வரும் கல்வியாண்டு முதல் பயில உள்ளனர். தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் வரும் ஆண்டிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ தமிழர் மரபு மற்றும் தமிழரும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை தங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று  தெரிவித்தார்.

மேலும் பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை மாணவர்கள் கற்பதற்கும் அண்ணா பல்கலைக்கழகம் புதிய பாடதிட்டத்தில் வழிவகை செய்துள்ளது.

First published:

Tags: Anna University, Engineering