செமஸ்டர் தேர்வுகள் ரத்து - மதிப்பெண்கள் எப்படி வழங்க வேண்டும்...? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான செய்முறை மற்றும் செய்முறை அல்லாத பாடங்களுக்கான மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வுகள் ரத்து - மதிப்பெண்கள் எப்படி வழங்க வேண்டும்...? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அண்ணா பல்கலைக்கழகம்.
  • News18
  • Last Updated: August 12, 2020, 11:30 AM IST
  • Share this:
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு தவிர்த்த மற்ற மாணவர்கள் அனைவருக்குமான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி தியரி பாடங்களுக்கு முந்தைய செமஸ்டரில் இருந்து 30 சதவிகித மதிப்பெண்ணும், 70 சதவிகிதம் உள் மதிப்பெண் அடிப்படையிலும் கணக்கிடப்படும். செய்முறை தேர்வுகள் கொண்ட தியரி பாடங்களுக்கு, மாணவர்கள் இதுவரை முடித்துள்ள ஆய்வக ரெக்கார்ட் உள்ளிட்டவற்றைக் கொண்டு மதிப்பெண் வழங்கலாம்.

எனினும், கடந்த செமஸ்டரில் தேர்விற்கு வராத மாணவர்களுக்கு உள்மதிப்பீட்டை கணக்கிட தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு புத்தகத்தை பார்த்து எழுதும் வகையிலோ, அல்லது ஆன்லைன் முறையிலோ அந்தந்த துறைகள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read... கொரோனா நோயாளிகளுக்காக ரோபோ சங்கர் கையில் எடுத்த சூப்பர் விஷயம்செய்முறை வகுப்புகளை பொறுத்தவரை கடந்த செமஸ்டரில் பெற்ற மதிப்பெண்களே இந்த செமஸ்டரிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading