இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த 7 மாதங்களுக்கு பிறகு கடந்த 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தற்போது வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளது மேலும் இறுதியாண்டு மாணவர்கள் இந்த மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நேரடியாக கல்லூரிக்கு வருகை தரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளொன்றுக்கு 5வேளை மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது
இதர மூன்று பாடவேளைகள் மாணவர்களின் புற மதிப்பீட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றது.