ஹோம் /நியூஸ் /கல்வி /

பொறியியல் அரியர் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு

பொறியியல் அரியர் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

2001-2002 கல்வியாண்டு முதல் அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும் மாணவர்கள் வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வோடு அரியர் தேர்வினை எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  2001-2002 கல்வியாண்டு முதல் அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் எழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.5000 கூடுதலாக செலுத்த வேண்டும். டிசம்பர் 3ம் தேதிக்குள் www.coe1.anna university.edu என்ற தளத்தில் அரியர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Anna University