Anna University Exam : அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு... ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்

அண்ணா பல்கலைக்கழகம்

2013-ம் ஆண்டு பாடத் திட்டத்தின்கீழ் இளநிலை மாணவர்களுக்கும் அடுத்த மாதம் 14-ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும்.

  • Share this:
    அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் அடுத்த மாதம் 14-ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் பிற பல்கலைக் கழகங்களில் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக துணைவேந்தர்களுடன் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக் கழகத்தில் 2017-ம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தின்கீழ் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும், 2013-ம் ஆண்டு பாடத் திட்டத்தின்கீழ் இளநிலை மாணவர்களுக்கும் அடுத்த மாதம் 14-ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று கூறினார்.

    Also Read : கொரோனா விதிகளை மீறி, மதுரையில் வானில் திருமணம்: விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை!

    2013-ம் ஆண்டு பாடத் திட்டத்தின் முதுநிலை மாணவர்கள் மற்றும் பிற பாடத் திட்ட மாணவர்களுக்கு அடுத்த மாதம் 21-ம் தேதி தேர்வு தொடங்கும் என்று அவர் கூறினார்.

    மற்ற கல்லூரிகளில் அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் ஜூலை 15-க்குள் தேர்வுகளை நடத்தி ஜூலை 30-க்குள் முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பேராசிரியர்களின் ஊதியத்தைக் குறைக்கும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.
    Published by:Vijay R
    First published: