நாளை நடக்க இருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் கஜா புயல் காரணமாக டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாளை நடக்க இருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: November 16, 2018, 4:40 PM IST
  • Share this:
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் நாளை (நவ. 17) நடைபெறவிருந்த தேர்வுகள் கஜா புயல் காரணமாக டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எனினும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் ஆகிய கல்லூரிகளில் தேர்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Also Watch:

First published: November 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்