குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக, தமிழகத்தில் 10 பொறியியல் கல்லூரிகள் கல்வி சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளை கொண்டுள்ளது. இந்த இணைப்புக்கு கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது இணைப்பை புதுப்பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு, புதுப்பித்துக் கொள்ளாத கல்லூரிகளின் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும். தமிழகத்தில், சமீப காலமாக பொறியியல் படிப்புகள் மீதான அதாரவான மனோபாவம் சற்று குறைந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைந்தது. உதரணமாக, கடந்தாண்டு பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் கலந்து கொண்ட பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை 50%க்கும் குறைவானதாக இருந்தது. பல கல்லூரி நிறுவனங்களில் அடிப்படை எண்ணிக்கை அளவிலான மாணவர்கள் கூட சேரவில்லை. இந்த ஆண்டுக்கான கல்லூரி புதுப்பித்தலில் 10 கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளை புதுப்பிக்கவில்லை. எனவே, இந்த 10 கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையைத் தொடரப்போவதில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. கொரோனா நோய்த் தோற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எந்தவித நேரடித் தேர்வு நடைபெறாத நிலையில், கடந்த 5ம் தேதி 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வு தொடங்கியது.
மாநிலத்தில் மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். 23.06.2022 அன்று +2 வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் மற்றும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில், இந்தாண்டு இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி முன்னதாக தெரிவித்தார். மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கலந்தாய்வு வசதி மையங்கள் அமைக்கப்படும் என்றும், மாணவர்களுக்குத் தகவல் அளிப்பது, வழிகாட்டுவது போன்ற உதவிகளை இம்மையங்கள் செய்து கொடுக்கும்" என்றும் தெரிவித்தார்.
நீட் தேர்வு முடிவடைந்தபின் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி
மேலும், தமிழகத்தில் இந்தாண்டு மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவடைந்தபின் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.