• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • பொறியியல் கல்லூரிகள் அனைத்திற்கும் சமமான கிரேடு முறை: அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

பொறியியல் கல்லூரிகள் அனைத்திற்கும் சமமான கிரேடு முறை: அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

சுயநிதி தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் இனி மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண்களை கணினி கொண்டு ஆய்வு செய்து பரவலாக சரிசமமான மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

  • Share this:
பொறியியல் கல்லூரிகள் அனைத்திற்கும் சரிசமமான கிரேடு முறை  கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தனியார் சுயநிதி தன்னாட்சி கல்லூரிகள் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வழங்குவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டு முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு இந்த நடவடிக்கை கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை
தமிழகத்தில் 440க்கும் மேற்ப்பட்ட  அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றுடன் 118 தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கி வரக்கூடிய  சுயநிதி தனியார் கல்லூரிகளும் உள்ளன.

இந்த கல்லூரிகள் மாணவர்களுக்கு தேர்வை நடத்துவது விடைத்தாள் திருத்துவது போன்ற பணிகளை அந்தந்த தன்னாட்சி பெற்ற கல்லூரிகளே மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சுயநிதி தன்னாட்சி பெற்ற பொறியியல்  கல்லூரிகள் தேர்வுகளில் தங்கள் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வழங்குவதாக தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக O , A மற்றும் B ஆகிய மூன்று கிரேடுகளை தவிர C,D,E  போன்ற குறைவான கிரேடுகளை வழங்குவதில்லை என தெரிய வந்துள்ளது. இது மாணவர்களை மதிப்பிடுவதற்குரிய சரியான நடைமுறை இல்லை என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரிய வந்துள்ளதை தொடர்ந்து, சுயநிதி தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் இனி மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண்களை கணினி கொண்டு ஆய்வு செய்து பரவலாக சரிசமமான மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க முடிவு செய்துள்ளது.

மேலும், சுயநிதி தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் அதிக மதிப்பெண்கள் வழங்குவதால் மாணவர்கள் அதிக கட்டணம் கொண்டு கல்லூரிகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதனால் அரசு கல்லூரிகளை தேடி வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் குறைகின்றது இதனையும் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைகழகம் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Must Read : ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இந்த நடைமுறையை நடப்பு கல்வியாண்டு முதலாமாண்டு மாணவர்களுக்கு கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: