அண்ணா பல்கலை. தேர்வு வினாத்தாளில் குளறுபடி: நவ.28-ல் மறுதேர்வு

அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுக்கான வினாத்தாளே வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

அண்ணா பல்கலை. தேர்வு வினாத்தாளில் குளறுபடி: நவ.28-ல் மறுதேர்வு
அண்ணா பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: November 17, 2018, 1:30 PM IST
  • Share this:
அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வில் கடந்த ஆண்டு வினாத்தாளையே இந்த ஆண்டும் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், வரும் 28-ம் தேதி மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட 538 உறுப்புக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில், மின்னணு தொலைத் தொடர்பியல் (ECE) பிரிவில் மின்னணு சாதனங்கள் எனப்படும் விருப்பப்பாடத் தேர்வு, கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுக்கான வினாத்தாளே வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வரும் 28-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக் கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் வெங்கடேசனிடம் கேட்டபோது, வினாத்தாள்களை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் தயாரிப்பது வழக்கம் என்று தெரிவித்தார்.


இந்நிலையில், உறுப்புக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இந்தத் தவறை செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் வெங்கடேசன் கூறினார்.

Also see... சின்னாபின்னமானது வேதாரண்யம்
First published: November 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்