முன்கூட்டியே வெளியான வினாத்தாள்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!

முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கணக்குப் பாடத் தேர்வை அண்ணா பல்கலைக் கழகம் ரத்துசெய்துள்ளது.

முன்கூட்டியே வெளியான வினாத்தாள்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!
அண்ணா பல்கலைக் கழகம்
  • News18
  • Last Updated: December 5, 2018, 8:45 AM IST
  • Share this:
வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளில் கணக்குப் பாடத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் ரத்துசெய்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கணக்குப் பாடத் தேர்வை அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு சர்ச்சையில் அண்ணா பல்கலைக்கழகம் சிக்கியுள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு, மின்னணு தொழில்நுட்ப பிரிவுக்குட்பட்ட மின்னணு சாதனங்கள் எனும் விருப்பப் பாட தேர்வுக்கு கடந்த ஆண்டுக்கான வினாத்தாள் வழங்கப்பட்டதும் பிரச்னையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Also read...

https://tamil.news18.com/news/tamil-nadu/anna-university-maths-question-paper-leak-probe-starts-75539.html

Also see...
First published: December 5, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்