கொரோனா பாதிப்பினால் உலகளவில் பொருளாதார பாதிப்பு இருந்தாலும் வளாக வேலைவாய்ப்பு மூலம் நிறுவனங்களுக்கு மாணவர்கள் தேர்வாவதில் பாதிப்பு இல்லை என அண்ணா அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு துறை தலைவர் இனியன், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு மூலம் இதுவரை 167 மாணவர்கள் தேர்வாகியுள்ளதாக தெரிவித்தார்.
இவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 20 முதல் -30 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதாக கூறினார். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் முறையில் வளாகத் தேர்வு, எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு என அனைத்தும் ஆன்லைன் முறையில் நடப்பதாகவும் தெரிவித்தார்.
அடுத்த மாதத்தில் டி.சி.எஸ், இன்ஃபோசி, எஸ்,சிடி.எஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் வளாக வேலைவாய்பிற்கு வரவுள்ளதால், 1500 மாணவர்கள் கூடுதலாக வேலைக்கு தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
Also read... ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்குமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு..
கடந்த ஆண்டு, கிண்டி பல்கலை வளாகம், எம்ஐடி, அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 4 உறுப்புக் கல்லூரிகளில் இருந்து சுமார் 2500 மாணவர்கள் வளாக தேர்வின் மூலம் தேர்வானதாகவும், அதே எண்ணிக்கையில் இந்த ஆண்டும் மாணவர்கள் தேர்வாக வாய்புள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் இருப்பதால் ஆன்லைனில் பண பரிவர்த்தனை போன்றவற்றின் தேவைகளால், வங்கி துறைகளுக்கான சாப்ட்வேர் தயாரிக்கும் மற்றும் இணைய சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் பொறியாளர்களுன் தேவை அதிகரித்துள்ளதாகவும் சிட்டி கார்ப் என்ற நிறுவனம் கடந்த ஆண்டு 27 பொறியாளர்களை தேர்வு செய்த நிலையில், இந்தாண்டு 54 பொறியாளர்களை தேர்வு செய்துள்ளதாகவும் அண்ணா பல்கலை வளாக வேலைவாய்ப்பு துறை தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.