அண்ணா பல்கலைக்கழகத்தில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பு கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டில் 142 நிறுவனங்களின் மூலம் 1700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 40 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவாக நடப்பாண்டில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் மென்பொருள் பொறியாளர்களின் தேவை அதிகரி்த்துள்ளதால் வேலைவாய்ப்பு வழங்குதலும் அதிகரித்துள்ளது. பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு வழங்கப்படும் சராசரி சம்பளத்தின் அளவு ஆண்டுக்கு 6 லட்ச ரூபாயிலிருந்து 7 லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 36 லட்ச ரூபாய் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Also Read : 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் வரை பள்ளி விடுமுறை- தேர்வுகளும் ஒத்திவைப்பு
ரிலையன்ஸ், ஹுண்டாய், வால்மார்ட் லேப்ஸ், ஓலா எலெக்ட்ரிக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன. இந்த வேலைவாய்ப்பு அதிகரிப்பு அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு தொடரும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.