முதுகலை 2-ம் ஆண்டு, இளங்கலை 3ம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணாப் பல்கலைக்கழகம்

முதுகலை 2-ம் ஆண்டு, இளங்கலை 3ம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணாப் பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்.

முதுகலை இரண்டாமாண்டு மற்றும் இளங்கலை 3ம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 • Share this:
  அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இணைப்பு கல்லூரிகள் அதன் உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் இந்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்கள் வருகின்ற 7ம் தேதி முதலும் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்கள் டிசம்பர் 2ஆம் தேதி முதலும் கல்லூரிகளுக்கு நேரடியாக வரலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து செமஸ்டர் தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் பொறியியல் பயிலக் கூடிய இறுதியாண்டு தவிர்த்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் எனவும் ஒரு பகுதி பாடங்கள் அவர்களுக்கு வைக்கப்படும் அக மதிப்பீட்டு தேர்வுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக கணக்கில் கொள்ளப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: