6 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை - அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா விளக்கம்

மாணவர்கள் தங்கள் படிப்பின் மீது அக்கறை எடுத்துபடித்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று சூரப்பா தெரிவித்தார்

6 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி  இல்லை - அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா விளக்கம்
சூரப்பா
  • News18
  • Last Updated: May 17, 2019, 4:21 PM IST
  • Share this:
அண்ணா பல்கழைக்கழகம் பருவத் தேர்வுகளில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாதது குறித்து துணை வேந்தர் சூரப்பா விளக்கமளித்துள்ளார்.

கிண்டி பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டதன் 225வது விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படக்கண்காட்சியை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆறு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்வாகாத விவகாரத்தில் அண்ணாபல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது.  மாணவர்கள் தங்கள் படிப்பின் மீது மேல் அக்கறை எடுத்துபடித்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.


Also Read : அண்ணா பல்கலை. பருவத் தேர்வு : 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை

சமூகத்தில் எதிர்மறை கருத்துகளை உருவாக்கும் என்பதாலே 92கல்லூரிகளில் 300 பாடபிரிவுகள் மூடப்பட்ட நடவடிக்கையில் கல்லூரிகளின் பெயர்களை வெளியிடவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும்  எந்தவிதமான அழுத்தமும் அரசிடமிருந்து வரவில்லை எனவும் தனக்கு தேவையான ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும் சூரப்பா தெரிவித்தார்.Also Watch : EXCLUSIVE கோவில் கல்வெட்டில் எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்

First published: May 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்