பல்வேறு காரணங்களினால் சில சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், முடிவுகளை உடனடியாக வெளியிட உயர்கல்வித் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, பொறியியல் கல்லூரிகளில் 3, 5, 7 ஆகியவற்றின் செமஸ்டர் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இருப்பினும், குறிப்பிட்ட 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியன.
குறிப்பாக, இந்த 18 சுயநிதி கல்லூரிகள், விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்களை அனுப்ப மறுத்து ஒத்துழைப்பு அளிக்க வில்லை என்றும், ஏற்கனவே பருவத் தேர்வுகளுக்காக பல்கலைக்கழகத்தால் வழங்குப்பட்ட முன்பணத்திற்கு சரியாக கணக்கு தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் வாசிக்க: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10% மாணவர்கள் மட்டுமே தமிழ் பயில்கின்றனர் - மத்திய அரசு தகவல்
ஊடகங்களில் இந்த செய்திகள் வெளியானதை அடுத்து, உயர்கல்வித் துறை அமைச்சரின் கவனத்திற்கு இந்த விசயம் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி இன்றே தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். இதனையடுத்து,மேற்கண்ட 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் செய்த தவறுக்கு அக்கல்லூரிகளின் மீது அண்ணா பல்கலைக்கழகத்தால் நடவடிக்கை எடுக்கவும் உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University