• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான 4-ம் கட்ட கலந்தாய்வு- நிரம்பிய 66% இடங்கள்

அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான 4-ம் கட்ட கலந்தாய்வு- நிரம்பிய 66% இடங்கள்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வில், பொதுப் பிரிவினருக்கான 4 கட்டக் கலந்தாய்வின் முடிவில் 66% இடங்கள் நிரம்பியுள்ளன.

  • Share this:
    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுடன், நடப்பாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு இணையவழியில் நடந்தது. கடந்தாண்டில் மொத்தமிருந்த 1.58 லட்சம் பொறியியல் இடங்களில் 4 கட்ட கலந்தாய்விற்கு பிறகு 43 சதவிகித இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தன. ஆனால், இந்தாண்டு மொத்தமுள்ள ஒரு 1.36 லட்சம் இடங்களில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரை 60 சதவிகித இடங்கள் நிரம்பி இருக்கின்றன.

    7.5 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் நிரம்பிய இடங்களையும் சேர்த்தால், 66 சதவிகித இடங்கள் பொறியியல் கலந்தாய்வில் நிரம்பி உள்ளன. கடந்தாண்டில் ஒட்டுமொத்தமாகவே 45 சதவிகித இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஓரிரு ஆண்டுகளாக அரசு பொறியியல் கல்லூரிகளை விட முன்னணி தனியார் கல்லூரிகளையே மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்கின்றனர். 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் கூட 83 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளையே தேர்வு செய்துள்ளனர். எனினும், 2ஆவது சுற்றுக் கலந்தாய்விலிருந்து, அரசுக் கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பி இருப்பதாக துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்தாண்டில் 20 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலையில், இந்தாண்டு அத்தகைய கல்லூரிகளின் எண்ணிக்கை 7ஆகக் குறைந்துள்ளது. நடப்பாண்டில் 2 தனியார் கல்லூரிகள் உட்பட மொத்தம் 16 கல்லூரிகளில் 100 சதவிகித இடங்கள் நிரம்பி இருக்கின்றன. பொறியியல் துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பதிவு செய்வதற்கான அவகாசம் வரும் 19ஆம் தேதிவரை உள்ள நிலையில், அக்கலந்தாய்வின் முடிவில், நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: