ஹோம் /நியூஸ் /கல்வி /

பொறியியல் 2-ம் ஆண்டு வகுப்பு ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கும் : அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் 2-ம் ஆண்டு வகுப்பு ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கும் : அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

Anna University | செய்முறைத் தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி தொடங்கும் என்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22 ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அட்டவணையில்,, 2022-23 கல்வியாண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் (Non Autonomus Affiliated Colleges ) உள்ள இளநிலை/முதுநிலை படிப்புகளுக்கான (பி.இ., பி.டெக்.பி.ஆர்ச். எம்பிஏ - முழு நேர மற்றும் பகுதி நேர) வகுப்புகள் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் டிசம்பர்  10ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

செய்முறைத் தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி தொடங்கும் என்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த பருவதுக்கான செமஸ்டர் வகுப்புகள்  2023, ஜனவரி 23ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடத் தேர்வுகளுக்கு முன்னதாகவே செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். இரண்டு தேர்வுகளுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். கல்லூரி பாடத்திட்டம்/ இணை பாடத்திட்டம்  நடவடிக்கைகள் காரணமாக  ஏற்பட்டால், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும்.

2022- 23 கல்வியாண்டிற்கான கலந்தாய்வு: 

நடப்பு கல்வியாண்டிற்கான, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. முதற்கட்டமாக, சிறப்பு பிரிவு இடஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர், 7.5% அரசுப் பள்ளி ஒதுக்கீடு) மாணவர்களுக்கு  வரும்    ஆகஸ்ட் 23 வரை  நடைபெறுகிறது .  ஆகஸ்ட் 25ம் தேதி அக்டோபர் 21ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதையும் வாசிக்கபி.இ படிக்க இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கல்வி உதவித் தொகை திட்டங்கள்

முன்னதாக, பொறியியல் கலந்தாய்வு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தொழில் கல்வி இயக்ககம் முன்னதாக  வெளியிட்டது. www.tndte.gov.in (அல்லது) www.tneaonline.org என்ற இணையப் பக்கத்தில் தரவரிசைப் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம்.

First published: