12, 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து: உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பணிந்தது ஆந்திர அரசு

கோப்புப் படம்

மற்ற மாநிலங்கள் எல்லாம் தேர்வுகளை ரத்து செய்துள்ள நிலையில், ஆந்திரா மட்டும் தேர்வை ரத்து செய்ய தயங்குவது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உயிரிழப்பு ஏற்பட்டால் அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.

  • Share this:
12  மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக ஆந்திர் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டதையடுத்து சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதை தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தன.

ஆந்திர மாநிலம் தேர்வை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முடிவில் இருந்தது. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஒரு உயிரிழப்பு ஏற்பட்டாலும், ஆந்திர அரசைதான்பொறுப்பாக கருதுவோம் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், தேர்வை நடத்துவது தொடர்பாக 2 நாட்களில் இறுதி முடிவை தெரிவிக்கும்படி கூறியது.

அதன்படி, இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வை நடத்த முடிவு செய்திருப்பதாக ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தேர்வு அறைக்குள் 15 மாணவர்களை மட்டுமே அனுமதிப்போம் குறைந்தது 30 ஆயிரம் தேர்வு அறைகளை அமைப்போம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, ஒரு உயிரிழப்பு ஏற்பட்டாலும்  அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்  தெரிவித்தது.  மற்ற மாநிலங்கள் எல்லாம் தேர்வுகளை ரத்து செய்துள்ள நிலையில், ஆந்திரா மட்டும் தேர்வை ரத்து செய்ய தயங்குவது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  இதையடுத்து இந்த வழக்கை 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்நிலையில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ஒத்தி வைப்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஜூலை 31ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிவுகளை அறிவிக்க முடியாது என்பதால் இந்த முடிவை ஆந்திர அரசு எடுத்துள்ளது. மதிப்பெண் வழங்குவது தொடர்பான மாற்று ஏற்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
Published by:Murugesh M
First published: